×

அமெரிக்காவில் முதல் ஓமிக்ரான் பலி: டெக்சாஸைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் இறந்தார்!!

லண்டன்: அமெரிக்காவின் ஓமிக்ரான் தொற்றால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை புதிய வைரஸ், முந்தைய டெல்டா வைரசைக் காட்டிலும் வீரியமிக்கது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை மீறி வேகமாக பரவக் கூடிய இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 1000 நாடுகளில் பரவி விட்டது.இதனிடையே டிசம்பர் தொடக்கத்தில் பிரிட்டனில் முதல்ஓமிக்ரான் பலி உறுதியான நிலையில் அங்கு இதுவரை 12 பேர் ஒமைக்ரானால் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 50 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவுன்டி நீதிபதி லீனா ஹிடால்கோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒமைக்ரான் தொற்றால் பலியான முதல் உள்ளூர்வாசி. தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். ஏற்கெனவே செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.முன்னதாக கடந்த டிசம்பர் 18ம் தேதியன்று அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட அறிக்கையின்படி 73% பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post அமெரிக்காவில் முதல் ஓமிக்ரான் பலி: டெக்சாஸைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் இறந்தார்!! appeared first on Dinakaran.

Tags : London ,America ,South Africa ,US ,Texas ,
× RELATED உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்;...